துணிச்சல்




சிறகுகளின் தனிமை
என் பயணங்களை உடைத்தெறிகிறது
பக்குவப்படாத சூழல்கள் 
வெறுமையை விதைத்துவிட்டுப்போகிறது
தனிச்சிறகால் இலக்கடையும்
துணிச்சல் எனக்கில்லை

வேடிக்கை பார்க்க நீளும் மரங்களுக்காக
நான் காயப்பட விரும்பவில்லை
மண்ணில் ஊர்வதாயினும் எனக்குச் சம்மதமே
ஓரிடத்தில் ஒடுங்கிவிடமாட்டேன்
எனக்கும் கால்கள் இருப்பதை உணர்கிறேன்
போராடி இலக்கடைவேன் 

 
"கவிஞர்" கி .அன்பு



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்