கொரோனா காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் ஏழாம் தேதி முதல் திறப்பு

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வருகிற 7ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளும் திறக்க தமிழக அரசு அறிவிப்பு 



உலகெங்கிலும் கொரானா பாதிப்பு அதிகரித்து வந்த சூழலில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது .அதனுடைய காலகட்டத்திற்குள் கட்டுக்குள் வராத்ததால் மீண்டும் இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.


 தற்போது மே மாதம் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .இந்த காலகட்டத்தில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது .இது அந்தந்த அரசுகளும் மாநிலங்களில் உள்ள நிலையைப் பொறுத்து மேலும் சில தளர்களை வழங்கி வருகிறது அந்த வகையில் தமிழகத்திலும்
மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் வருகிற 7ஆம் தேதி முதல் நடத்த அனுமதி வழங்கி உள்ளது இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது


அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்து இருக்கலாம் கொரோனா தாக்கம் இன்னும் குறையாத சூழல் இருப்பதால் ஒருவருக்கொருவர் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் கூட்டமாக ஐந்து பேருக்கு மேல் டாஸ்மார்க் கடை அருகே நிற்கக்கூடாது பார்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
. ஆயினும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை


இதற்கான காரணத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகாவில் மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில் அருகில் இருக்கக்கூடிய மக்கள் அண்டை மாநிலங்கள் படையெடுத்து வருவது அரசின் கவனத்திற்கு வந்த்தி அதனைத் தடுக்கும் பொருட்டு டாஸ்மாக் கடைகள் தற்போது தொடங்கவிருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்