ஒரே நாளில் சென்னையில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை மக்கள் அதிர்ச்சி:

 ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


    இந்தியாவின் தலைசிறந்த மாநகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் சென்னையில் தற்போது கொரோனாருத்ர தாண்டவம் ஆடி வருகிறது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்்

             குப்பை அள்ளுபவர்கள் முதல்    கோடீஸ்வரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் வாழக்கூடிய மாநகரம் சென்னை. இங்கு வரக்கூடிய பாதிப்பு என்பது அனைவருக்குமானது என்பதை உலகமே அறியும். இதற்கு முன்பாக சென்னை சந்தித்த மழை வெள்ள பாதிப்பு ,புயலின் பாதிப்பு போன்றவை இதற்கு சான்றாகும்.

தற்போது வந்திருக்கக்கூடிய பாதிப்பு முன்பு சொன்னதை விட மிகப்பெரியதாகும் ஏனெனில் இது கண்ணுக்கு தெரியாத வைரசால் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று என்பதால் யாருக்கு இருக்கிறது எங்கே இருக்கிறது என்று அறியப்படாமல் மிக விரைவாக பலரிடமும் பரவி வருகிறது


தனி மனித இடைவெளியும் சுய சுகாதாரமும் தான் இதற்கு ஏற்ற தடுப்பு முறை என்று அரசு அறிவித்த போதும் பலரும் இதை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஊர்சுற்றியன் விளைவுதான் இன்றைக்கு சென்னையின் ஒரு பகுதி மக்கள் பெரிதும் துயரத்தில் ஆழ்ந்து வருவதற்கு காரணமாக அமைந்துவிட்டது

இனியாவது சென்னை மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் அரசின் எச்சரிக்கை காதில் வாங்கி மனதில் நிலைநிறுத்தி வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் விரைவில் சென்னை  கொரோனா இல்லாத மாவட்டமாக மாறும் இந்த ஒரு
 மாவட்டம் மாறினாலே தமிழகத்தின் ஒட்டுமொத்த  பாதிப்பும் நீங்கும் என்பதை சென்னைவாசிகள் உணரவேண்டும்









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்