பிற மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்

வேலைக்காக பிற மாநிலங்களுக்கு சென்று ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாதவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து சிறப்பு ரயில்களை இயக்கம் இருக்கிறது


இதன் முதல் கட்டமாக தெலுங்கானாவில் இருந்து ஜார்கண்ட்க்கு முதல் ரயில் புறப்பட்டுச் சென்றது இதில் சுமார் 1200 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர் .தெலுங்கானாவில் கட்டிட பணிக்காகவும் இதர பணிகளுக்காகவும் ஜார்க்கண்டில் இருந்து வந்த தொழிலாளர்கள் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சிரமப்பட்டு வந்தனர்.

 எனவே அவர்களை பெட்டிக்கு 52 பேர்கள் வீதம் 24 பெட்டிகள் அடங்கிய ரயிலில் அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தேவையான முக கவசம் குடிநீர் போன்ற பலவற்றையும் ஏற்பாடு செய்து உடல் வெப்பநிலையை சோதித்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல பிற மாநிலங்கள்மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் மத்திய மாநில அரசுகள் இணைந்து பயணிகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக ரயில்களை இயக்க முன்னேற்பாடுகள் செய்து வருகின்றன.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்