Tamil |News|கொரானாவில் பல வகைகள் அதிர்ச்சித் தகவல்

  


  கொரானா வைரஸில் பல்வேறு வகைகள் இருப்பதாக இது குறித்து விரிவான ஆய்வு செய்த மேற்கு வங்கத்தைச் சார்ந்த உயிர் மரபியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 

   கொரானா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆராய்ச்சி செய்து வரும் அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி இந்த கொரான வைரஸானது ஏ ,ஏ 2 ஏ ,பி ஓ போன்ற பத்து வகைகளாக தனித்தனி தன்மைகளுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர் 

எனவேதான் இந்த பத்து வகையான வைரஸ்களையும் கட்டுப்படுத்துவதற்கு தனிப்பட்ட ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று கூறினர் .மேலும் ஒரு வகைக்கு தரக்கூடிய மருந்து மற்றொரு வகை ஒத்து வருமா என்பது தற்போதைக்கு சந்தேகமாகவே உள்ளது என்றும் கூறியுள்ளனர் .

எனவேதான் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க கூடிய மருத்துவ அறிஞர்களும் இதனை கவனத்தில் கொண்டு அனைத்து வகைக்கும் பொருந்தும்படியாக தடுப்பு மருந்தை கண்டறிய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்

முதலில் உலகெங்கும் தாக்கியது o வகை வைரஸ் என்றும் தற்போது அதிகமாக தாக்கி கொன்றது A2A என்கிற வகை வைரஸ் என்றும் அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.இதே வைரஸ் தொடர்ந்து தாக்குமா  அல்லது வேறு ஒரு வைரஸ் இதனை முந்திக் கொண்டு மக்களை தாக்குமா என்கிற அச்சமும் எழுகிறது .ஆயினும் அறிவியல் அறிஞர்கள் தங்களுடைய தீவிர முயற்சியால் தடுப்பு மருந்தை விரைவிலேயே கண்டுபிடிப்பார்கள் என்று நம்புவோம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்