கொரான உனக்கு நன்றிகள்

கொரான உனக்கு நன்றிகள்

ஓசோனின் ஓட்டையை அடைக்கிறாய்
உறவுகளை ஒன்றாய் இணைக்கிறாய்
மனிதநேயம் மேலும் வளர்க்கிறாய்
சூழலில் சுத்தம் நிறைக்கிறாய்
கொரொனாவே உனக்கு நன்றி

அலுவலகம் வீட்டில் வந்தது
வீட்டின் முழு அர்த்தம் புரிந்தது
குழந்தைகளின் ஆசை நடந்தது
அப்பா அம்மா பாசம் கிடைத்தது
கொரோனா உனக்கு நன்றி

காற்றும் நீரும் சுத்தமானது
கடலும் வயலும் புனிதமானது
நதியும் பனியும் இனிமையானது
இரவும் பகலும் இயல்பானது
கொரோனா உனக்கு நன்றி

ஆயினும் இந்த பலிகள் நிறுத்திடு
பாவம் உயிர்கள் விட்டு விலகிடு
புரிந்து கொண்ட உலகை மறுமுறை
தீண்டாமல் தாண்டி விலகிடு
இருக்கும் மனிதர் வாழ வழிவிடு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்