சென்னையும் கொரானாவும்


சென்னையை தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறது கொரானா. காரணம் தமிழக அளவில் எடுத்துக்கொண்டால் சென்னை நகரின் சுற்றளவு   மக்கள் நெருக்கமும் அதிகம்.
தமிழகத்தின் தலைநகரம் என்பதாலும் சுகாதாரப்பணிகள் அதிகமாக சிறப்பாக மேற்கொள்ளப்படும் நகரம் என்பதாலும் நோய்தொற்று அவ்வளவாக இருக்காது என்று பலரும் கருதிய நிலையில் அதற்கு மாறாக விருவிருவென சென்னையின் பல பகுதிகளிலும் கணிப்புகளையும் தாண்டி பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
இதற்கு என்ன காரணம் என்று என்று பார்க்கும் போது கொரானா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு ஏற்படும் என்று அறிந்த மக்கள் ஊரடங்குக்கு முன்பாக பொருட்களை வாங்கி விட வேண்டும் என்று பல்வேறு இடங்களில் அதிகமாக குவிந்தனர்.
 இது மற்ற பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் நெருக்கத்தை விட அதிகமாக இருந்தது. மேலும் ஊரடங்கு காலத்தில் இளைஞர்கள் கொரானா பற்றிய பயம் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தது முக்கிய காரணமாகும். மேலும் வயதானவர்களும் கவலை இன்றி பல இடங்களில் சுற்றி திரிந்தது நோய்தொற்று அதற்கான காரணமாக அமைந்தது.
ஆனால் தற்போது 4 நாட்கள் கடைபிடிக்கக் கூடிய முழுமையான ஊரடங்கின் பலனாக இது வேகமாக குறைந்து நோய் தொற்று முழுமையாக நீங்கும் நிலை இனி உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்