காத்திருக்கிறேன்


என் இரவுகள்
காத்திருப்பது உனக்காகத்தான்
எதிரில் பார்க்கையில்
எதிரியைப்போல  பார்த்துப்போகும்
உன் பொய்ப் பார்வை
இரவில் மட்டும் தான்
இருளில் ஒளிந்துகொள்கிறது.
உயிருக்குள் சொட்டுசொட்டாய்
நீசேர்த்து வைத்த காதல் கொட்டித்தீர்ப்பது
இரவில் தான்
நான் காத்திருக்கிறேன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்